சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மணை பட்டா தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

0
311

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

தூத்துக்குடி மாவட்டம். காயல் பட்டிணத்தில் ஏழை மக்கள் ஆண்டாண்டு காலமாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள் விட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் வாடகை பணம் ஏற்றி வசிலிப்பதால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வாடகை பணம் கொடுக்க முடியாமல் மிகவும் சிரமம்பட்டு வருகிறார்கள் .

மேலும் அம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி தரும் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி காயல் பட்டிணத்தில் சொந்த வீடு இல்லாத எழை மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

எனவே : காயல் பட்டிணத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமைப்பு செய்ய பட்டிருக்கிறதா என்று உடனடியாக ஆய்வு செய்து ஆக்கிரமைப்பு செய்ய பட்ட நிலங்களை அரசு கை பற்றி சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமைப்பு செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here