அரசியல் பிரமகர் படுகொலைக்கு முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடியை சேர்ந்த வசீம் அக்ரம் மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துனை செயலாளராக பொறுப்பு வகித்தவர்.முன் விரோத காரணத்தால் கூலிப்படையினரை எவி விட்டு வசீம் அக்ரம் படு கொலை செய்ய பட்டார் என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த கொடூர சம்பவத்தை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .
வசீம் அக்ரமை படு கொலை செய்த சமூக விரோதிகள் அனைவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். கூலிப்படையினரை எவி இந்த படு கொலை செய்ய காரணமாக இருந்த நபர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வலியுறுத்துகிறது.
வசீம் அக்ரமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்தள்ள வசீம் அக்ரம் குடும்பத்திற்க்கு இழப்பிடு ரூ50 லட்சமும் அரசு வேலையும் தமிழக அரசு தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் போதை பொருளாளன கஞ்சாவினால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகிறார்கள். இளைஞர்களை கஞ்சா பழக்கத்திலிருந்து மீட்டு எடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம். மேலும் இளைஞர்களை சீரழித்து வரும் கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் கஞ்சாவை ஓழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
எனவே : அமைதி பூங்காவனமாக தமிழகத்தில் இது போன்ற அரசியல் பிரமகர்களை சமூக விரோதிகள் படு கொலை செய்வதனால் சட்ட ஓழுங்கு பாதிப்பு பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. ஆகயினால் படு கொலை சம்பவங்களை செய்து வரும் கூலிப்படையினர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்சியின் சார்பாக தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.













