தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடிப்பது வழக்கம். அப்போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படுவது உண்டு. இதனால் தமிழக அரசு, தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா காலம் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் 108 கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று பணிபுரிந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.















