மழைநீர் வடிகால் தொடர்பாக முன்விரோதம் :

0
209

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால்(43). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் மழைநீர் வடிகால் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை ஜெயபால் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சுதாகர் மற்றும் அவரது உறவினர்கள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் ஜெயபாலை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அதிலும், ஆத்திரம் தீராத கொலையாளிகள் அவரது தலையை வெட்டி நடைபாதையில் வைத்துவிட்டு சென்றனர்.

தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் மற்றும் திருவெறும்பூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். தொடர்ந்து, அவரது உடலை உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here