இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் புதிதாக எடை குறைந்த நவீன சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வகை சிலிண்டர்களில் முன்னா 2 கிலோ, சோட்டு 5 கிலோ, காம்போசிட் சிலிண்டர் 5 கிலோ, 10 கிலோ ஆகிய எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது விநியோகம் செய்யப்படும் வழக்கமான இண்டேன் சிலிண்டரைவிட இது கூடுதல் வலுவானது, பாதுகாப்பானது. இந்த சிலிண்டர்கள் அனைத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த சிலிண்டர்கள் குறித்தும், வாடிக்கையாளர்கள், பொதுமக்களிடம் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வாகனத்தை கடந்த 5 தேதி இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் எஸ்.எம்.வைத்யா சென்னையில் தொடங்கி வைத்தார்.














