தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை செநலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்.
இந்தியாவில் இன்று 40 விழுக்காடு கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் குறைவாக இருந்த நிலையில், சற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 195 என பதிவாகியுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே உள்ளது என கூறினார்.
BA4, BA5 வகை உறுமாறிய கொரோனா தொற்று புதிதாக பதிவாவது, 5வது அலை தொடங்கியது என்பதனை காட்டுகிறது. தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் முக கவசம் அணிவது தேவை இல்லை என பலரும் நினைக்கிறார்கள்.
அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், பாசிட்டிவ் என்று வந்தாலும் கவலை இல்லை. மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது பலரும் வீட்டு தனிமையில் தான் உள்ளனர். பரிசோதனை செய்யாமல் பிறருக்கு தொற்றை பரப்பி விட வேண்டாம் என அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு பெரும் பாங்காற்றிவருகிறது. இதனால், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். செலுத்தாத நபர்களுக்காக, 12ம் தேதி தமிழகம் முழுவதும் 1லட்சம் முகாம்கள் நடைபெற உள்ளது. அதனை அனைவரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டுப் என தெரிவித்தார்.
கருமுட்டை விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோடை மழை ஒரு சில இடங்களில் பெய்து வருகிறது. வீட்டு மாடி, டயர் போன்றவற்றில் தேங்கி உள்ள தண்ணீரில் ஏடிஸ் கொசு தங்கி டெங்கு ஏற்படுத்தும். தென்காசியில் 2 பேருக்கு டெங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தண்ணீரை அகற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தனியார் கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளது, இதனால் அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு சிகிச்சையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பேட்டி – ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலர்














