சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரின் மனைவி. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்,சென்னை கந்தன்சாவடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பவானி நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது குறித்து தகவலறிந்த மணலி புதுநகர் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பவானி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் நிறுவன ஊழியரான பவானி என்பவர் வேலைக்கு ரயிலில் செல்லும் போது ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் மற்றும் கணவர் கண்டித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி பவானி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
ம்மி விளையாட்டில் 20 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. துவரை 20 சவரன் நகைகளை விற்று ரம்மி விளையாடியதும் மேலும், தமது சகோதரிகள் இருவரிடம் தலா ஒன்றரை லட்சம் என 3 லட்சம் கடன் பெற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில் நேற்று குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் தற்கொலை என்பதால் தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















