திருவொற்றியூர்
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதனால் வட சென்னைக்குட்பட்ட திருவொற்றியூர் ராஜாஜி நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது குடியிருப்புக்கள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டில் வசிக்க முடியாமல் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர் இதையடுத்து மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உணவுகள் அளித்து வருகின்றனர் இந்த நிலையில் மழைநீர் பாதிக்கப்பட்ட ராஜாஜி நகர் பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிட்டார் மழை நீர் புகுந்ததால் உடைமைகளை இழந்த பொதுமக்களிடம் ஆறுதல் கூறினார் பின்னர் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி வேட்டி சேலை பால் போன்ற நிவாரண உதவிகளை வழங்கினார்.அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, ஜெயக்குமார் ,வளர்மதி பெஞ்சமின், முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் நிர்வாகிகள் அஜாக்ஸ் பரமசிவம் ,சிவில்முருகேசன், தனரமேஷ் ,டோக்கியோ மணி, சரவணன் கே.கார்த்திக் உள்பட பலர் உடன் சென்றனர்.
















