புகைப்படக்கலைஞர் தூக்கு மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது:

0
282

சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் வசிக்கும் விக்னேஷ் வயது 26 என்பவர் அருகில் உள்ள கப்பல் போலு தெருவில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் ஆறு வருட காலமாக வேலை பார்த்து வருகிறார்

இந்நிலையில் திருமண நிகழ்விற்க்காக போட்டோ எடுப்பதற்காக செல்வதனால் போட்டோ ஸ்டுடியோவில் தனி அறை ஒன்றில் படுத்துக் கொள்வதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்

இந்நிலையில் இன்று அதிகாலையில் போட்டோ ஸ்டுடியோவில் உடன் பணி புரிபவர்கள் ரூமை திறந்து பார்த்த பொழுது பேனில் தனக்குத் தானே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here