மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ;

0
345

திருவள்ளூர் – மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு அப்பகுதி வார்டு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் தலைமை வகித்தார்,மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் முஹம்மது ஹாஸின், மகேந்திரவர்மன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் கலந்துகொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார்,இதில்,,கண்,காது, தொண்டை, மற்றும் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், டெங்கு காய்ச்சல் கண்டறிதல், கர்ப்பிணிப் ஊட்டசத்து, எலும்புமுறிவு,எக்ஸ்ரே, ஸ்கேன்,ஈசிஜி, உள்ளிட்ட அனைத்துவிதமானசிகிச்சைகளும் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் இதில் கதிர்வேல், சையது அலி, அப்துல் அகமது, சாதிக், பாபுலால், சாகுல் ஹமீத், அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here