எண்ணூர் கடல் பகுதியில் கடலில் குளிக்க சென்ற மேற்கு வங்க வாலிபர் சாவு!

0
387

திருவொற்றியூர், ஆக, 30- சென்னை, எண்ணூர் பகுதியில், நண்பர்களுடன் குளிக்க சென்ற, மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர், கடலில் மூழ்கி பலியானார்.

சென்னை, திருவொற்றியூர், கார்கில் நகர், தமிழ் நாடு குடிசை வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சூமணி ஓரான், இவரின் மகன்
ஜியான் ஓரான் (35), ரூபேஷ் (26), பப்லு, லைத்துஓரான் இவர்கள் நண்பர்கள் ஆவர், மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர்கள், அந்த பகுதியில் தங்கி, கார்பெண்டர் வேலை பார்த்து வந்தனர், நேற்று முன் தினம் , எண்ணூர், ராமக்கிருஷ்ணன் நகர் கடலுக்கு சென்றனர், பப்லு, ஜியோன் ஓரான் ஆகியோர் மட்டும், கரையில் அமர்ந்திருந்தனர், லைத்து ஓரான், ரூபேஷ் ஆகியோர் மட்டும், கடலில் இறங்கி குளித்தனர், அப்போது, ராட்சத அலையில், இருவரும் சிக்கினர், இதில், லைத்து ஓரானை மட்டும் காப்பாற்றி, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ரூபேஷ் மட்டும் , அலைக்குள் மூழ்கினார், அவரை தேடி வந்த நிலையில், நேற்று மதியம், அவரின் உடல் கரை ஒதுங்கியது, போலீசார் உடலை கைப்பற்றி , பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here