திருவொற்றியூரில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது
சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவுச் சாலையில் உள்ள பலகை தொட்டி குப்பம் அருகே திருவொற்றியூர் காவல் நிலைய தலைமை காவலர்கள் ராஜராஜன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்
அப்பொழுது அப்பகுதியில் இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கு இணங்க உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்ததை கண்டு காவலர்கள் சென்று விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர் பின்னர் காவலர்களிடம் இருந்து தப்பி செல்ல முயற்சித்தனர்
அதில் ஒருவரை மட்டும் திருவொற்றியூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்ட பொழுது கலையரசன் என்பதும் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது மேலும் இவர் மீது வடசென்னை பகுதிக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது இதனை தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தி செல்போன் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும் தப்பி ஓடிய நபர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த மாலிக் பாஷா என்பதும் தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து கலையரசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
















