குடிபோதையில் செல்போன் கோபுரம் மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி;

0
275

நள்ளிரவில் குடிபோதையில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்,

சென்னை எண்ணூர் நேதாஜி நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நேதாஜி நகர் கருமாரியம்மன் கோவில் அருகே உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சிக்க முயன்ற டவர் மீது ஏறிக்கொண்டிருந்த வாலிபரை கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் எண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து எண்ணூர் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் மணலி தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்கள் மூலம் வந்து செல்போன் உச்சியில் அமர்ந்து தற்கொலை ஈடுபட முயன்ற வாலிபரை தீயணைப்புத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அவருடன் பேச்சுக் கொடுத்து அவரை சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்,

விசாரித்த போலீசார் அவர் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்றும் நேதாஜி நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும் அவர் குடிபோதையில் இருந்ததால் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டது தெரியவந்தது இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here