மத விரோதப் போக்கை கடை பிடிக்கின்ற கட்சி திமுக என்று பாஜக கட்சி மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரான கரூர் நாகராஜன் கூறுகையில் கருப்பர் கூட்டம் 8 கோடி தமிழக மக்கள் வணங்கும் முருகப்பெருமானையும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைபடுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர் தைப்பூசத் திருநாள் அன்று தமிழகத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வழிபட்டு வருகின்றனர் அவர்கள் அனைவரது மனதையும் இச்சம்பவம் புண்படுத்தியுள்ளது எதிர்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தை இதுவரை கண்டிக்காதது எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது என்றும் கோடிக்கணக்கான இந்து மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள கடவுளை கொச்சைப் படுத்துகிற அவர்களை கண்டிக்கின்ற எண்ணம் துளி அளவு கூட இல்லை என்றால் மத விரோதப் போக்கை கடை பிடிக்கின்ற கட்சியாக திமுகவை நாங்கள் கருதுகிறோம் என்றும் தமிழக முருக பக்தர்கள் அனைவரும் நாளை சஷ்டி திருநாளில் அவரவரது வீடுகளுக்கு முன்பாக மாலை 6 மணிக்கு முருகப்பெருமானின் படத்தையும் வேலையும் வைத்து பூஜை செய்து கந்த சஷ்டி கவசத்தை பாட வேண்டும் என்றும் பாட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும் இந்து ஆன்மிக அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்
பாஜக மாநில மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் கலை இலக்கியப் பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது














