*ராயபுரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பாக தனலட்சுமி மேல் நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது*
சென்னை அக்டோபர் 29,
ராயபுரம் தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்களும் மாணவர்களும் பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படி இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட அலுவலர் வடக்கு ராஜேஷ்கண்ணா அறிவுரையின்படி, உதவி மாவட்ட அலுவலர் முருகன் தலைமையில் ராயபுரம் நிலைய அலுவலர் பரமேஸ்வரன் ஏற்பாட்டில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயபுரம் தனலஷ்மி மேல்நிலைப் பள்ளியில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை வைத்து தீபாவளி பண்டிகையின்போது மாணவிகள் பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதற்கும் தீ விபத்து ஏற்படாமல் பட்டாசு வெடிக்கவும் மாணவ மாணவிகளுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீபாவளியின்போது பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு அவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததாக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தெரிவித்தனர்.















