இஸ்லாமிய இயக்க தலைவர்கள் மீது காயல் அப்பாஸ் பகிரங்க குற்ற சாட்டு ;

0
306

இஸ்லாமிய இயக்க தலைவர்கள் மீது முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார் .

தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள இஸ்லாமியர்கள் சொந்த வீடு இல்லாமல் , தங்க இடமும் இல்லாமல் , ரோட்டோரம் குடும்ப நடத்தியும் , வெள்ளி கிழமைகளில் ஜீம்மா நாள் அன்று பள்ளி வாசல் முன்பு இஸ்லாமிய ஆண்கள் , மற்றும் பெண்கள் அடுத்தவர்களிடம் கையேந்தி பிளைக்கும் சூழல் உள்ளது . இந்த சூழலில் இருந்து மீட்டு அவர்கள் கஷ்டத்தை போக்கியும் வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேறத்திற்கு செல்ல என்ன உதவி செய்தீர்கள் . உங்களால் எதாவது ஓன்று சொல்ல முடியுமா ?

ஆண்டாண்டு காலமாக கஷ்டம் படும் இஸ்லாமிய ஏழை மக்கள் இன்று வரையிலும் கஷ்டத்தை அனுபவித்து தான் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையில் கொஞ்சமும் கூட முன்னேற்றம் இல்லை? ஆனால் இஸ்லாமிய தலைவராகிய நீங்கள் இஸ்லாமியர்களின் ஓட்டு வாங்குவதற்கும், நீங்கள் இருக்கும் கூட்டனி கட்சியில் சீட்டு வாங்குவதற்கும், அரசியல் ஆதாயம் தேடுவதற்கும், அப்பாவி இஸ்லாமியர்களை வைத்து அரசியல் செய்து பெயர்,புகழ்,கார்,பங்களா என்று நீங்கள் மட்டுமே சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள் ? ஆனால் உங்களை நம்பியுள்ள இஸ்லாமிய ஏழை மக்களின் கஷ்டத்தையும் உணர்வுகளையும் நீங்கள் கண்டு கொள்வதில்லை ?

இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கண்டு கொள்வது யாரை என்றால் பணம் வசதி படைத்தவர்களை மட்டும் தான் ஏனென்றால் அவர்கள் தான் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு வளர்ச்சி நிதி நன் கொடை கொடுக்கிறார்கள் , அதனால் பணக்காரர்களுக்கு மட்டுமே முக்கியம் துவம் கொடுக்க படுகிறது ?

பணம் வசதி படைத்த இஸ்லாமியர்களுக்கு மட்டுமே முக்கிய பொறுப்புகள் , அதற்க்கான மரியாதைகள் கொடுக்க படுகிறது . ஆனால் அடிப்படை தொண்டனாக இருந்து இயக்கத்திற்க்காக இரவு பகலும் பாரமால் கஷ்டபடுவோர்களுக்கு முக்கிய பொறுப்புகள் , மரியாதைகள் கொடுக்க படுவதில்லை ?

இஸ்லாமிய இயக்க தலைவர்கள் பதவிக்காகவும் நான் பெரிய ஆளு , நீ ஆளு என்றும் வரட்டு கெளரவத்துக்காகவும் ஓருவருக் ஓருவர் ஓற்றுமை இல்லாமல் சண்டை போட்டு வரும் நீங்கள் எப்படி இஸ்லாமிய சமுதாயத்தின் பாது காவலர்கள் என்று சொல்ல முடியும் ? இஸ்லாமிய சமுதாயம் பின் தங்கி இருப்பதற்கு இஸ்லாமிய தலைவர்கள் முழு காரணம் என்பது தான் எனது குற்ற சாட்டு !

அன்புடன் ✍️

காயல் அப்பாஸ்

மாநில பொது செயலாளர்

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here