கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா மூட்டைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் ‘

0
388

ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா மூட்டைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கஞ்சா மூட்டைகள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக வடக்கு மண்டல இணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

தகவலின் பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் விஜய் அவர்களின் தலைமையிலான போலீசார் திருவொற்றியூர் காவல் நிலையம் உட்பட்ட மாட்டு மந்தை மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர் வேகமாக வந்த இரண்டு கார்களை மடக்கி சோதனை மேற்கொண்டபோது இரண்டு ஓட்டுனர்களும் முன்னுக்கு முரணாக பதில் அளிக்கவே வாகனத்தின் பின்பக்கம் திறந்து பார்த்தபோது வண்டியில் கஞ்சா மூட்டைகள் அடுக்கி இருப்பது தெரியவந்தது இரண்டு வாகனத்தையும் பறிமுதல் செய்து திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆந்திர மாநிலம் விளைவிக்கப்பட்ட முதல் தரம்வாய்ந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அதிக பணத்திற்கு விற்பனை செய்து விட்டு செல்லும் மொத்த வியாபாரிகள் என தெரியவந்தது. இவர்கள் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், ரங்கோலி ராஜேஷ் ரெட்டி, சிவபிரசாத் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 60 லட்சம் மதிப்பிலான கஞ்சா 120 கிலோ மூட்டைகள் மற்றும் இரண்டு கார்கள் 3 செல்போன்கள் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here