12 ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற திருநங்கை நிவேதா;

0
235

12 ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற திருநங்கை  நிவேதாவை  அவரது பெற்றோர்கள் இன்று சென்னை நடு குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர்

நிவேதா பேட்டி

நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் எங்க அம்மா அப்பா நான் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதால் ரொம்ப சந்தோசமா இருக்காங்க

நான் ஒரே ஒரு திருநங்கை எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணதால அவங்க்ளுக்கு ரொம்ப மகிழ்ச்சி நேற்று
ஸ்வீட் எல்லாம் கொடுத்துட்டு திருப்பி இன்னைக்கும் வந்து பார்க்க வந்திருக்காங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு .
எங்க சொந்தக்காரங்க என் சமுதாய மக்கள், என் நண்பர்கள் என அனைவரும் போன் வாழ்த்து தெரிவிச்சாங்க

நீட் தேர்வு எழுதி இருக்கிறேன் அந்த ரிசல்ட் வந்து நான் பாஸ் ஆயிடுவேன்னு நினைக்கிறேன், பாஸ் ஆகி ஒரு சீட்டு கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும்.
நீட் எக்ஸாம் நான் ஒரே ஒரு திருநங்கை மட்டும் தான் எழுதி இருக்கேன் .

இன்று தலைமை செயலகத்தில் எனக்கு வாழ்த்து தெரிவிச்சு உனக்கு மேற்படிப்புக்கு ஏதாவது உதவி என்றால் கட்டாயம் செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள்
ஸ்கூல் படிக்கணும்னு நான் சொன்ன போது ஷாம்பவி என்ற திரு நங்கை ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள்.

மேலும் தான் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்திருப்பதால் வீட்டில் உள்ள அனைத்து விஷயங்களையும் இனி நான் தான் கவனிக்க வேண்டும் என்று கூறினார்

 

அம்மா பேட்டி

என் பொண்ணுக்கு தலைவரா நான் ஆசைப்பட்டேன் ஆனால் அது என்னால முடியல
இங்க இருக்குறவங்க எல்லாம் என் பொண்ணுக்கு தலைவாரி அனுப்பும்போது எனக்கு சந்தோஷமா இருந்தது
நீட் தேர்வு எழுதி இருக்கா நீட் தேர்வு பாஸ் பண்ண கொஞ்சம் நல்லா இருக்கும்
எல்லோரும் உதவி பண்றேன் சொல்லிருக்காங்க உதவி கிடைச்சா நல்லா இருக்கும்
அமைச்சர் அதிகாரி மேற்படிப்புக்கு கண்டிப்பாக உதவி செய்கிறோம் என்று கூறியது சந்தோஷமா இருக்கு

எங்க கூட எங்க வீட்டுல வந்து என்று நாங்கள் கூறுகிறோம் ஆனால் அவள் இங்கே இந்த சூழ்நிலையில் வளர்ந்து பழகி விட்டேன் நான் அடிக்கடி உங்களை வந்து பார்க்கிறேன் என்று கூறுகிறாள் அவள் எங்களுடன் இருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் மேலும் பள்ளிக்கரணையில் நாங்கள் இருக்கும் வீடு கூரை வீடு எனவே அவள் தற்போது இருப்பது மகிழ்ச்சி என்று கூறினார்

அப்பா பேட்டி

நான் கூலி வேலை பார்த்து க் கொண்டிருக்கிறேன் ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் என் மகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மேற்படிப்புகள் படிப்பதற்கு அனைவரும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here