சென்னையில் மிச்சாங் புயல் காரணமாக 2 நாட்கள் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்தது. சென்னைக்கு மிக அருகே மிச்சாங் புயல் நிலை கொண்டிருந்ததால் சுமார் 30 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதில் 6 மணி நேரம் மிக பலத்த மழை பெய்திருக்கிறது. கடந்த 3 மாதங்களில் சென்னை மாவட்டம் பெற்ற மழை அளவை விட கடந்த 3 நாட்களில் அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















