திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்களில் ஒருவன் மாயம் மற்றொருவர் உயிரிழப்பு!

0
462

சென்னை திருவொற்றியூரில் திருச்சினாங் குப்பம் கடலில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்களில் ஒருவரை அலை இழுத்துச் சென்று மற்றொருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவொற்றியூர் திருச்சினாங் குப்பம் கடல் பகுதியில் இன்று பொழுதைக்கழிப்பதற்காக கடலில் இறங்கி குளிக்க சென்ற 2 சிறுவர்களில் ஒருவரை அலை இழுத்து சென்று மாயமாகியுள்ளார்
மற்றொருவன் அலையில் சிக்கி உயிருக்குப் போராடி தத்தளித்தவரை அருகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றினர் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருக்கவே உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதித்தனர்
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் விசாரணை ஈடுபட்டனர் விசாரணையில்
தண்டையார்பேட்டை துர்காதேவி நகரைச் சேர்ந்த விஜய் என்ற 17 வயது சிறுவன் மற்றும் ராகுல் என்ற சிறுவன் என்று தெரியவந்து இவர்கள் இருவரும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது கல்லூரியில் சேருவதற்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது
இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் திருவொற்றியூர் கடல் பகுதிக்கு வந்தபோது கடலின் அலைகளை பார்த்து குதூகலம் அடைந்த சிறுவர்கள் வெயிலின் தாக்கத்தினால் கடலில் இறங்கி குளித்துள்ளனர்
அப்போது திடீரென எழும்பிய ராட்சத அலையால் திக்குமுக்காடிய சிறுவர்கள் உயிருக்கு போராடி உள்ளனர் இதில் ராகுல் என்ற சிறுவனை மட்டும் அருகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர் ஆனால் விஜய் என்ற சிறுவனை அலை இழுத்து சென்று மாயமாகியுள்ளார்
இதனையடுத்து காப்பாற்ற பட்ட சிறுவன் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார் ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவன் விஜயின் உறவினர்கள் மகன் காணாமல் போனதில் கடற்கரையில் அழுது புரண்டு ஒப்பாரி வைத்தனர்
திருவொற்றியூர் எண்ணூர் கடல் பகுதிகளில் பொழுதை கழிக்க அதிக அளவில் கடலில் குளிக்க செல்லும் இளைஞர்கள் சிறுவர்கள் கடலில் மாயமாவதும் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது கடந்த ஆறு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here