சென்னை,புது வண்ணாரப்பேட்டை பகுதியில், 19 வயது பேத்தியை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்து, கர்ப்பமாக்கிய வழக்கில், தாத்தாவை போக்சோவில் கைது செய்தனர்.
சென்னை, புது வண்ணாரப் பேட்டை, புச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி மகன் பன்னீர்செல்வம்(70) ,இவர் வீட்டில், அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். 19 வயது பேத்தி ஒருவரும் உள்ளார். வீட்டில், யாரும் இல்லாத நேரத்தில், பேத்தியை மிரட்டி, உங்கள் குடும்பத்திற்கே சோறு நான் தான் போடுகிறேன் என கூறி, அடிக்கடி பாலியல் தொலை கொடுத்துள்ளார், இதில் ,பேத்தி கர்ப்பம் அடைந்தார்.இது குறித்து, திருவொற்றியூா் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டன. போலீசார் வழக்கு பதிவு செய்து, , தாத்தாவை போக்சோவில் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.














