காசிமேட்டில் இஸ்லாமிய சுடுகாடு அருகே எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

0
391

சென்னை காசிமேட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சுடுகாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு 12 அடி வரை குழி தோண்ட ஜேசிபி இயந்திரம் தராத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், மேலும் நேற்று குழி தோண்ட முடியாததால் மயானத்தில் வைத்து சென்ற சடலத்தை சிலர் எரித்து விட்டதாக கூறி மயான வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காசிமேடு போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் விரைந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் உடனடியாக ஜேசிபி வரவழைக்கப்பட்டு சடலங்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இஸ்லாமிய சுடுகாட்டில் சடலங்களை அடக்கம் செய்ய குழி தோண்டுவதற்கு எப்போதும் ஒரு ஜேசிபி இங்கு இருக்கும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்ததை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here