சென்னை கொடுங்கையூர் உள்ள ராதாகிருஷ்ணன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் பள்ளியுடன் இணைந்து “துளிரும் விஞ்ஞானிகள் “என்ற அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது,இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் தங்கள் வடிவமைத்த அறிவில் சார்ந்த பொருட்களுடன் கலந்து கொண்டனர். அவர்களுடன் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார் மேலும் மாணவர்கள் தயாரித்த அறிவியல் கண்காட்சி சம்பந்தமான கருவிகளை நேரில் சென்று பார்த்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். சென்னை பெரம்பூர் சென்மேரிஸ் மெட்ரிகுலேஷன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் மாணவர்கள்
எஸ். கே அப்துல் ஷாகித் ஹமீத், ஜே.தீபக் குமார்,ஆர் எஸ் கெளசிக்,கே. விமல் குமார் ஆகியோர் இந்த கண்காட்சியில் “செயற்கை கருப்பை” என்ற ஒரு பொருளை வடிவமைத்து
கலந்து கொண்டனர் உடன் ஆசிரியைகள் தாமரைச்செல்வி, காஞ்சனா ஆகியோர் இருந்தனர்.















