அனைத்து மீனவர் சங்கத்தின் நிர்வாகிகள் கேரளா மாநிலத்தில் உள்ள மீன்வளத்துறையின் கீழ் உள்ள ( MATSYAFED ) யின்*நிர்வாக இயக்குனர் டாக்டர் திரு.P.சகாதேவன் அவர்களையும், துணை பொதுமேலாளர் திரு.D.லாலாஜி அவர்களையும்,விற்பனை மேலாளர் திரு.மிதுன் சூசா அவர்களையும் சந்தித்து, மீன்வளத்துறையால் தமிழ்நாட்டில் சென்னை இராயபுரத்தில் இயங்கி வந்த வலை தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டதால் தனியார் வலை கம்பெனிகள் தங்களது இஷ்டத்துக்கு விலையை உயர்த்தி விற்பதால் பெரிதும் பாதிக்கப்படக்கூடியதமிழக மீனவர்களுக்கு தரமான கில்நெட் வலைகளை குறைந்த விலையில் தமிழகம் முழுவதும் வழங்க கேரளா அரசின் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நாஞ்சில் P.ரவி அவர்களும்,வடசென்னை மாவட்ட செயலாளர் திரு S.முருகன் அவர்களும்,மாநில துணை தலைவர் திரு. J.தணிகைமலை அவர்களும்,படகு உரிமையாளர் திரு. S.சசிகுமார் அவர்களும், மாநில இளைஞரணி திரு. G.K.ரமேஷ் அவர்களும் நேரில் சென்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்..கேரளா மீன்வளத்துறை கீழ் உள்ள ( MATSYAFED )க்கு கண்ணூர், கொச்சின், திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இயங்கி வரும் இந்த நிறுவனத்திற்கு மிக தரமான கில்நெட் வலை தயாரிக்க நூல்களை சப்ளை செய்யும் தலை சிறந்த நிறுவனமான Glofil FIBRES & plastics தலைமை நிர்வாக அலுவலர் திரு. M.SHAFIULLAH அவர்களையும் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள செண்பகராமன் புதூர், மற்றும் எறும்புகாடு போன்ற இடங்களில் இயங்கி வரும் நூல் தயாரிப்பு நிலையங்களை பார்வையிட்டு
தமிழக மீனவர்களுக்கு உதவும் வகையில் தரமான நூல்களை குறைந்த விலைக்கு MATSYAFED கேரளா அரசுக்கு வழங்கினால் மட்டுமே மீனவர்களுக்கு குறைந்த விலையில் வலைகள் கிடைக்கும் என்று எடுத்துக் கூறியதன் விளைவாக லாபத்தை குறைத்து தரமான நூல்களை வழங்கி மீனவர்களுக்கு உதவ எங்கள் நிறுவனம் தயார் என்றும், மீனவர்கள் தான் எங்களுக்கும் முதலாளிகள். எனவே எங்கள் GFP நிறுவனம் அனைத்து உதவிகளையும் செய்யும். மீனவர்கள் வாழ்வில் உதவ இந்த வாய்ப்பை தந்த இறைவனுக்கு நன்றி என்று GFP நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் திரு. M.சபிஉல்லா அவர்கள் தெரிவித்தார்கள்.மேலும் தொழில்நுட்ப மேலாளர் திரு.M.பிரவீன் அவர்கள் எந்த நேரத்திலும் நூல் சம்மந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், எங்கள் நிறுவனத்தின் சார்பாக அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக மீனவர்கள் எங்கு அழைத்தாலும் வந்து உதவி செய்ய எங்கள் நிறுவனம் என்னை அனுப்பியுள்ளது என்றும் கூறினார்.(அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA)










