சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகர் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் அருண் நாராயணன்(19) இவர் நேற்று மதியம் சுனாமி குடியிருப்பு அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த நேசமணி(36) என்பவர் அருண் நாராயணனிடம் தகராறு செய்து கத்தியால் கழுத்தை வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டார் காயமடைந்த அருண் நாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த நேசமணி என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் நேசமணியின் மகளுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும் முன்னாள் காதலனான அருண் நாராயணன் தனது மகளுடன் சேர்ந்து சுற்றி வந்ததை கண்டித்தும் அருண் நாராயணன் கேட்காததால் ஆத்திரமடைந்து கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக தெரியவந்தது
நேசமணியின் மீது வழக்கு பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்
















