மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் செய்வதன் பலன்கள் !

0
194

புரட்டாசி மஹாளய பட்சம்*

இன்று
புரட்டாசி 1
17-09-2024
பௌர்ணமி

நாளை
18-09-2024
புரட்டாசி 02
புதன் கிழமை
மஹாளயம் ஆரம்பம் !

03-10-2024
புரட்டாசி 17
வியாழக்கிழமை
மஹாளயம் நிறைவு !

*மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் செய்வதன் பலன்கள் !*

‘மஹாளயம்’ என்றால்
‘கூட்டமாக வருதல்’

மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாகக் கூடும் நேரமே மஹாளய பட்சம் !

‘பட்சம்’ என்றால் 15 நாட்கள் !

மறைந்த நமது முன்னோர் 15 நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே
*மஹாளய பட்சம் !*

இது புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள்…
பிரதமை திதியில் துவங்கி…
அமாவாசை வரை நீடிக்கும் !

புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே *மஹாளய அமாவாசை* எனப்படும் !

தை அமாவாசை…
ஆடி அமாவாசை…
ஆகியவற்றை விட உயர்ந்தது இது !

மற்ற மாதங்களில் அமாவாசை அன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம் !

ஆனால்,
மஹாளய பட்ச காலத்தில்…

*பிரதமை* துவங்கி
*அமாவாசை* வரை
தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும் !

ஒட்டு மொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூற வேண்டும் !

தீர்த்தக் கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும் !

குருமார்களுக்கு ஆடைகள் தட்சணை

ஏழைகளுக்கு உணவு உதவி,

படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவி

நோயாளிகளுக்கு மருத்துவ உதவி

ஆகியவை தானமளிக்க வேண்டும் !

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர்…

தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை !

அந்தப் பயிற்சியை இந்த மஹாளய காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் !
.
தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும் !

அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும் !

*மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் செய்வதன் பலன்கள் !*

*1-ஆம் நாள்*
*பிரதமை*
பணம் சேரும்

*2-ஆம் நாள்*
*துவிதியை*
ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்

*3-ஆம் நாள்*
*திரிதியை*
நினைத்தது நிறைவேறுதல்

*4-ஆம் நாள்*
*சதுர்த்தி*
பகைவர்களிடமிருந்து தப்பித்தல்

*5-ஆம் நாள்*
*பஞ்சமி*
வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்

*6-ஆம் நாள்*
*ஷஷ்டி*
புகழ் கிடைத்தல்

*7-ஆம் நாள்*
*சப்தமி*
சிறந்த பதவிகளை அடைதல்

*8-ஆம் நாள்*
*அஷ்டமி*
சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்

*9-ஆம் நாள்*
*நவமி*
சிறந்த வாழ்க்கைத் துணை,
குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்

*10-ஆம் நாள்*
*தசமி*
நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்

*11-ஆம் நாள்*
*ஏகாதசி*
படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி

*12-ஆம் நாள்*
*துவாதசி*
தங்கநகை சேர்தல்

*13-ஆம் நாள்*
*திரயோதசி*
பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

*14-ஆம் நாள்*
*சதுர்த்தசி*
பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை

*15-ஆம் நாள்*
*மஹாளய அமாவாசை*
முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்

எனவே…
மஹாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் …

புண்ணியம்  நமக்கு மட்டுமல்ல …
நம் தலைமுறைக்கும் சேர்த்து தான் !

இறைவன் அருளால்
பொறுமையுடன் காத்திருக்கத்
தெரிந்தவர்கள் அனைவருக்கும் காலம் கைகூடும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here