முதியோர் இல்லங்களில் புத்தாண்டை கொண்டாடிய சமூக சேவகர் எம் கோபிநாத்…

0
293

குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்,

 

வேலூர்மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள முதியோர் இல்லங்களான புனித அன்னாள் முதியோர் இல்லம் , ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள நம்பிக்கை முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் என்பதுக்கும் மேற்பட்ட முதியோர்கள் இங்கு உள்ளனர் .

இவர்களை முதியோர் இல்லத்தில் உள்ள நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக பராமரிக்கின்றனர்.
உயிர் அறக்கட்டளை நிறுவனரும் ரோட்டரி மாவட்டத்தின் செயலாளருமான சமூக சேவகர் எம். கோபிநாத் அவர்கள் பல்வேறு சேவைகளை முதியோர் இல்லங்களுக்கு செய்து வருகிறார். அவர்களின் தேவையினை அறிந்து உடனுக்குடன் கேட்டபோது எல்லாம் செய்து வருகிறார் .
அந்த வகையில்  ஆங்கில புத்தாண்டை முதியோர் இல்லத்தில் முதியோர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி ஆசி பெற்றார் .
கோபிநாத்தின் செயலைக் கண்டு முதியோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்வில் உயிர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர் சந்தோஷ் குமார் , ஆர்.மோகன் பிரபு , முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்வில் முதியோர்களுக்கு கேக் பழம் மற்றும் இனிப்பு உள்ளிட்டவை வழங்கி புத்தாண்டை முதியோர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here