வேலூர் மாவட்டம்
![]()
குடியாத்தம் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்கின்ற நாகு தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பதாக காவல்துறைக்கு வந்த தகவல் அடிப்படையில் சில நாட்களாக காவல்துறையினர் நாகராஜன் பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்
அதன் விளைவாக நாகராஜ் என்பவர் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் ஒரு மறைவிடத்தில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வந்ததை கண்டறிந்தனர். அதனை அடுத்து நாகராஜ் கஞ்சா விற்பனை செய்யும் போது சுற்றி வளைத்து நாகராஜை கைது செய்தனர் மேலும் அவர் அந்த மறைவிடத்தில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நாகராஜ் காவல்துறையினர் செய்த விசாரணையில் நாகராஜ் என்பவர் ஆந்திர மாநிலம் பலமனேர் அருகே காணவா பள்ளி என்கின்ற இடத்தில் கஞ்சா மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்
அதனைத் தொடர்ந்து நாகராஜ் மீது வழக்கு பதிந்தனர். மேலும் இதுவரை நாகராஜ் மீது ஐந்து கஞ்சா போதை வழக்குகள் உள்ளதாகவும்,
கடந்த ஒரு ஆண்டில் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் மட்டும் 21 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் சுமார் 12 கிலோ கஞ்சா இதுவரை பறிமுதல் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இதுவரை கஞ்சா வழக்கு பதியப்பட்ட நான்கு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பயந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்