சென்னை மாநகராட்சி நான்காவது மண்டலம் 38 வது வார்டுக்கு உட்பட்ட நாவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்;

0
204

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அதன்படி சென்னை மாநகராட்சி நான்காவது மண்டலம் 38 வது வார்டுக்கு உட்பட்ட நாவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு சென்னை மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை வகித்தார் கோட்ட உதவி பொறியாளர் பாலசந்தர் முன்னிலை வகித்தார் இந்த கூட்டத்தில் நாவலர் குடியிருப்பு, நேதாஜி நகர், துர்கா தேவி நகர், கருணாநிதி நகர், உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்தும் தமிழக அரசு செய்துவரும் நல்ல திட்டங்கள் குறித்தும் பேசினர் அதன்படி காலை சிற்றுண்டி திட்டம் பேருந்தில் மகளிர்களுக்கு இலவச பயணத்திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்டவைக்கு தமிழக அரசுக்கு தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர் அதைத் தொடர்ந்து தங்கள் பகுதியில் சாலை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் பழுதடைந்த சாலைகளை சரி செய்து தர வேண்டும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும் என்று நாவலர் குடியிருப்பு பகுதி சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்தனர் அதேபோல் இலவச பட்டா வழங்கிட வேண்டும் என்று துர்கா தேவி நகர் மக்கள் கோரிக்கை வைத்தனர் ஐ ஓ சி பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ளது அதனை கட்டி அதிக பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட வேண்டும் குறிப்பாக தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையத்திலிருந்து கொடுங்கையூர் வழியாக பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு மினி பேருந்து இயக்கப்பட வேண்டும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இந்த பகுதியில் அமைக்க வேண்டும் என கருணாநிதி நகர் மக்கள் கோரிக்கை வைத்தனர் பொதுவாக 38வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் காவல்துறையினர் சரிவர ரோந்து செல்வதில்லை இதனால் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது இதனை தடுக்க இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் இதே போல் பல்வேறு கோரிக்கைகளை இந்த பகுதியை சேர்ந்த மக்கள் வைத்தனர் இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டு ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கப்படும் என்று மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தெரிவித்தார் மேலும் எழில் நகர் பகுதியில் தற்போது மாநகராட்சி ரயில்வே துறையும் இணைந்து கட்டி வரும் ரயில்வே மேம்பாலத்தை கட்டுவதற்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் அதேபோல் நேரு நகர் ரயில்வே கிராசிங் பகுதியில் புதிதாக பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here