தள்ளுவண்டி கடையில் இருவரிடையே மோதல் ஒருவர் கைது:

0
276

கொருக்குப்பேட்டை பகுதியில் தள்ளுவண்டி வைப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக எடை கல்லால் அடித்து தாக்கிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன் கொருக்குப்பேட்டை பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் பணிபுரியும் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு தனியாக வியாபாரம் செய்வதற்காக அதே இடத்தில் கடை வைத்துள்ளார் இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டால் நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றவே எடை கல்லால் உச்சந் தலையில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்கே நகர் போலீசார் எடைக்கல்லால் தாக்கிய சத்யாவை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிந்து புழல் சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here