சென்னை திருவொற்றியூரில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் இடம் செல்போன் குறித்த நபரை ஓட்டுநர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை எண்ணூர் விரைவு சாலையில் துறைமுகத்துக்கு செல்லும் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அணுகு சாலையில் கனரக வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கும் வேளையில் ஓட்டுனர்களின் தூக்கத்தின் நேரத்தைப் பயன்படுத்தி செல்போன் மற்றும் பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை முருகன் என்ற ஓட்டுநர் வாகனத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது செல்போன் பறித்து தப்பி ஓடிய நபரை அருகிலிருந்த ஓட்டுனர்கள் பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் செல்போன் பறித்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்
விசாரணையில் மணலி சின்னசேக்காடு பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பதும் விடியற்காலை நேரங்களில் லாரி ஓட்டுனர்களிடம் செல்போன் பறித்து வருவது தெரிய வந்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்














