சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான (Mob Operation Parade) ஒத்திகை பயிற்சி;

0
67

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா, இகாய அவர்களின் உத்தரவின் பேரில் 24.08.2024 அன்று பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தை கலைப்பதற்கான Mob Operation Parade ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.கணேஷ் பாபு அவர்கள் காவலர்கள் கலவர கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் எனவும், கலவரம் நடக்கும் போது காவலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் அதற்கான வழி முறைகளையும் காவலர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் விளக்கம் அளித்தார்.

மேலும், இனிவரும் காலங்களில் காவலர்கள் சட்ட ஒழுங்கு ஏற்படும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் பணியின் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

உடன் ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here