CVPA- நமக்கு நாமே திட்டத்தின் விரிவாக்கம்;

0
242

CHENNAI VIDEO PHOTOGRAPHER ASSOCIATION -நமக்கு நாமே திட்டத்தின் விரிவாக்கம்*

* நமக்கு நாமே திட்டத்தில் ஒருவர் உறுப்பினராக சேர வேண்டும் என்றால், அவர் முதலில் CVPA -ல் கண்டிப்பாக உறுப்பினராக இருக்க வேண்டும்.

* நமக்கு நாமே திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்த நாள் முதல், அவர் CVPA-ல் தொடர்ந்து ரினிவல் செய்வது கட்டாயம் ஆக்கப்படுகிறது.

* நமக்கு நாமே திட்டம் குறைந்தபட்சம் ஆயிரம் உறுப்பினர்களை இணைத்து, அதை ஒரு இலக்காக கொண்டு செயல்படுத்துவதே இத்திட்டத்தின் முதல் நோக்கமாகும்.
* ஆயிரம் உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் இணைந்த பிறகு, நமக்கு நாமே திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நமது கலைஞர்களுக்கு ஏற்படும் துயர விபத்து சம்பவம் மற்றும் இயற்கை மரணங்களுக்கு அவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு எவ்வித காப்பீடும் எடுக்காமல் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 2 லட்சம் ரூபாய் வரை உடனடியாக வழங்கப்படும். (உறுப்பினர் சேர்க்கைக்கு ஏற்ப இந்த தொகை மாறுபடும்).

* இத்திட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ள ஆயிரம் ரூபாய் முதலில் செலுத்த வேண்டும். இந்த தொகை நலத்திட்ட உதவி தொகையாக வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும்.
* ஒவ்வொரு உறுப்பினரின் இழப்பீட்டிற்கும், நீங்கள் செலுத்திய ஆயிரம் ரூபாய் தொகையில் இருந்து 200 ரூபாய் எடுத்து வழங்கப்படும்.
* இவ்வாறு நான்கு உறுப்பினர்கள் ( 4×200=800) இழப்பீட்டுக்கு பிறகு மீண்டும் நமக்கு நாமே திட்டத்திற்கு 800 ரூபாயை மீண்டும் செலுத்த வேண்டும். இந்த தொகையை மொத்தமாகவோ, அல்லது தவணை முறையாகவோ நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.

* உங்கள் கணக்கில் 200 ரூபாய் மினிமம் பேலன்ஸ் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* நமக்கு நாமே திட்டத்தில் உங்களை உறுப்பினராக சேர்த்துக் கொண்டு, உதவி தொகை ஆயிரம் ரூபாய் செலுத்திய நாட்களில் இருந்து, 120 நாட்களுக்குப் பிறகு நமக்கு நாமே திட்டம் பயன்பாட்டிற்கு வரும்

* தற்போது நமக்கு நாமே திட்டம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதால், உடனடியாகஆயிரம் உறுப்பினர்களை இணைப்பதே நமது இலக்கு. இதனால் முதல் 120 நாட்களுக்கு மட்டும் 60 வயது உள்ளவர்கள் கூட உறுப்பினராக சேரும் வாய்ப்பை, தவற விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

* இது குறித்து மேலும் விபரம் அறிய CVPA சங்க செயலாளர்  அவர்களின்  எண்ணுக்கு (92821 64723) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here