ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன் வயது (29) ராயபுரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22-ந் தேதி எஸ்.என். செட்டி ரோட்டில் பணியில் இருந்தார் அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடி போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த காதல் ஜோடி இருவரும் போலீசாரை கண்டதும் வாகனத்தை நிற்காமல் சிக்னலை கடந்து வேகமாகச் சென்றனர் அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்தனர் அங்கு பணியில் இருந்த ஹரிஹரசுதன் ஓடிச் சென்று கீழ விழுந்தவர்களை தூக்கி அருகில் இருந்த பிளாட்பார்ம் மீது அமர வைத்தனர் . பைக்கை வேகமாக ஓட்டி வந்த வாலிபரும் அவருடைய காதலியை இருவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது போலீசாரை கண்டவுடன் அந்த வாலிபர் போலீசாரின் ரிப்லெக்ட் ஜாக்கெட்டை பிடித்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள காசிமேடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அங்கு வந்த போலீசார் தப்பி ஓடிய வாலிபரின் காதலியான ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (19) வயது இளம்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். பின்னர் இதைக் குறித்து ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அந்த வாலிபரை தேடி வந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்பட 6 வழக்குகளில் தொடர்புடைய தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ஹரிஷ் குமார் (20) என்பது தெரிய வந்தது பின்னர் இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்













