ஆர்.கே.நகர், பெரம்பூர், தொகுதியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு!* *மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்:

0
319

சென்னை, நவ.09: தொடர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் ஆர்.கே.நகர், மற்றும் பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து மழையினால் பாதிக்கப்பட்ட 41 வது வட்டம் எழில் நகர், எம்.ஜி.ஆர். நகர், மற்றும் பெரம்பூர் பகுதி 37 வது வட்டம் முல்லை நகர் குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி கம்பளி, பெட்சீட், 5 கிலோ அரிசி, கோதுமை, சர்க்கரை, பிரட், பிஸ்கெட் பாக்கெட், உள்ளிட்ட மளிகை பொருட்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கினார்.
அப்போது வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் அருகில் இருந்தார்.

ஆய்வு கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் எம்.ஏ.சேவியர், மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், ஆர்.கே.நகர் பகுதி கழக செயலாளர்கள் ஆர்.நித்தியானந்தம், சீனிவாச பாலாஜி, பெரம்பூர் பகுதி கழக செயலாளர்கள் வியாசை எம். இளங்கோவன், என்எம். பாஸ்கரன், மற்றும் இ.எஸ். சதீஷ் பாபு, ஆட்டோ தேவராஜ், எஸ்.அன்பு,
பி.வெங்கடேசன், இ.பாலமுருகன், வண்ணை கணபதி, நெல்லை கே.குமார், எம்.எம்.கோபி, ஏ.வினாயகமூர்த்தி, எம். ராமமூர்த்தி, பி.கே.யுவராஜ், வேல்முருகன், இ.வேலுமேஸ்திரி, சந்தனசிவா, எம். கண்ணா, ஆர்.வி.அருண்பிரசாத், வி.எஸ் புருஷோத்தமன், கே.பி.கர்ணன், எம் மாலா, நாகூர் மீரான், ஒ.ஏ.ரவிராஜன், மரக்கடை விஜி, எஸ்.சுயம்பு, எம். ஹரிகிருஷ்ணன், ஆர். சிவக்குமார், ஏ.கே.சந்திரசேகர், வி.அலெக்ஸ், எம் சிபி. பாஸ்கரன், மற்றும்
மாவட்ட பிற அணி நிர்வாகிகள், மகளிரணியினர், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here