0
192

*ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் செய்தி சேகரிக்கும் பணியில் இருந்த நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா மீது தாக்குதல்…*

*CHENNAI PRESS CLUB / சென்னை பிரஸ் கிளப் கடும்கண்டனம்..!*

 

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகின்ற நிலையில் அங்கு பல்வேறு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில இன்று 21-02-2023 செவ்வாய்க்கிழமை காலை ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் பகுதியில் KNK சாலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த பகுதி வாக்காளர்களை மக்களை ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளனர். என்ற தகவல் கிடைக்கப்பெற்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் ராஜேஷ்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளனர்.

செய்தி சேகரிக்கும் பணியில் இருக்கும் போதே அந்த செய்தி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது அடையாளம் காணக்கூடிய அரசியல் கட்சியினர் செய்தியாளர் ராஜேஷ்குமாரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன் ஆபாசமாக பேசி ஒளிப்பதிவாளர் கருப்பையா தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை சென்னை பிரஸ் கிளப் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் களத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துவதுடன் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்திட தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சென்னை பிரஸ் கிளப் வலியுறுத்துகிறது.

அ.செல்வராஜ்
தலைவர்

ச.விமலேஷ்வரன்
பொதுச் செயலாளர்

*CHENNAI PRESS CLUB*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here