சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு  சிங்காரவேலர் சாலை என பெயர் வைத்திட வேண்டும் :இஸ்கப் அமைப்பின் சிங்காரவேலர் பிறந்த தின விழாவில் தீர்மானம்:

0
224

சென்னை : தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டும் ,இந்தியாவில் மே தினத்தை முதன்முதலாக கொண் டாடியவரும் , இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகனுமான சிங்காரவேலரின் எழுத்தாக்கங்கள் நூல்கள் முழுமையும் மறு பதிப்பு செய்திட வேண்டும். கிழக்கு கடற்கரை சாலைக்கு “சிந்தனை சிற்பி சிங்கார வேலர் சாலை” என பெயரிடப்பட வேண்டும் .

சென்னையின் பிரதான இடத்தில் சிங்காரவேலருக்கு சிலையும் மணி மண்டபம் அமைத்து தமிழக அரசு சிறப்பு சேர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள், இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் சார்பில் நடை பெற்ற சிங்காரவேலர் பிறந்ததின விழாவில் நிறைவேற்றப்பட்டன.

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 164 வது பிறந்தத தின விழா சார்பில் பிப்.18 அன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத் தில் உள்ள சிங்காரவேலர் முழு உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப் பட்டது .மாலை தியாகராய நகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு அலுவலகமான பாலன் இல்லத்தில் சிங்காரவேலரின் பிறந்த தின விழா நிகழ்வுகள் நடை பெற்றன .

“இஸ்கப்” அமைப்பின் சென்னை பெருநகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார் .மாவட்ட பொருளாளர் ஆர். எஸ் .மாதவன் முன் னிலையில் தலைமை குழு உறுப்பி னர் வழக்கறிஞர் கே. தேசிங் தலை மையேற்று நிகழ்வை ஒருங்கிணைத் திட்டார் .

தேனி மாவட்ட இஸ்கப் உறுப்பினர் இளம் வழக்கறிஞர் மணிகண்டன் பிரபல திரைஇசைப் பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்ட மறைந்த சமூக ஆர்வலர்களுக்கும் ,துருக்கி -சிரியா வின் பூகம்பேடுபாடுகளில் உயிரிழந்த வர்களுக்கும் இரங்கல் தெரிவித்த அஞ்சல் தீர்மானத்தை கோவிந்த ராஜன் வாசித்திட ,இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

வழக்கறிஞர் கே தேசிங் தலைமை உரை நிகழ்த்தி, நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்களை புகழ ஞ்சலி உரையாற்றுமாறு ஆற்றுப்படுத் தினார்.

பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்றோர் தொழிற்சங்கத்தின் வி.கே.கோபாலன் ஏஐடியுசியின்ஆனந்தராவ் பாஸ்கர் பத்திரிகை ஊடக பணியாளர் சங்கத் தின் தலைவர் இசைக்கும் மணி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். கிருஷ்ணகுமார் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் செயலர் அ.பாரதி உள்ளிட்டோர் சிங்கார வேலரின் சிறப்புரைத்து பேசினர். அவர்கள் பேசியதாவது :

சமூக சீர்திருத்தவாதிகளான வள்ள லார், பெரியார் ,அம்பேத்கர் போன்று சிங்காரவேலரும் கொண்டாடப்பட வேண்டியவரே. “சிங்காரவேலர்: தென் னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்” எனும் நூலை என்சிபிஹச் புத்தக நிறுவனம் வெளியிட்டதோடு சிங்கா ரவேலர் பற்றிய சிறப்பு கூட்டங்களை சென்னை மவுண்ட் ரோடு புத்தக அரங்கில் நடத்தி வந்துள்ளது.

“மக்கள் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெற முடி யாது ” என சிங்காரவேலர் குறிப்பிட்டு பேசி இருக்கிறார் என்றெல்லாம் அக்கூட்டங்களில் கருத்துரைக்கப் பட்டிருக்கிறது.

பெரியார் சோசலிச சித்தாந்தங்களை பின்பற்றியதற்கான பின்னணியில் சிங்காரவேலரின் பங்களிப்பு இருந்து ள்ளது .சுயமரியாத இயக்க உந்துத லும் இணைந்து இருந்ததாலே “ஈரோட்டுப் பாதை”யை பெரியாரும் சிங்காரவேலும் இணைந்தே உருவாக் கினார்கள்.

அடையாள அரசியலை மதவெறி அரசியலை புறந்தள்ளி வர்க்க அரசி யலை புரிந்து கொள்ள சிங்காரவேல ரின் எழுத்தாக்கங்களை படித்தறிந்திட வேண்டும். சிங்காரவேலர் பன்முகத் தன்மையர்; சிறந்த செயல்பாட்டாளர், தொழிற்சங்கவாதி. பத்திரிகையாளர். பலநூல்களை படித்தறிந்து நல்படை ப்புகளை தந்துட்ட படைப்பாளியும் ஆவார்.

வ உ சிதம்பரனார்,சுப்பிரமணிய சிவா திரு.வி.க சக்கரை செட்டியார் போன் றோரோடு தொழிற்சங்க இயக்கங் களில் பங்கேற்று வழி நடத்தியவர். பாரதியாரின் “சுதேசமித்திரன்” , பெரி யாரின் “குடியரசு” , ஜீவாவின் “ஜன சக்தி” யிலும் தொடர்ந்து கட்டுரை களை எழுதி வந்திருக்கிறார்.

ரயில்வே தொழிலாளர் டிராம்வே தொழிலாளர் போராட்டம் முதற் கொண்டு ஆயில் டேங்கர் தொழிலா ளர் போராட்டம் அச்சு தொழிலாளர் போராட்டம் என் அடித்தட்டு மக்களின் போராட்டங்களில் அனைத்திலும் பங்கேற்று தொழிலாளி வர்க்க ஒருமைப்பாட்டை வளர்த்தெடுத்தவர்.

1922ல் கயா மாநாட்டில் முதல் முறை யாக “தோழர்களே” என விளித்து, நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக உங்கள் முன் நிற்கிறேன்” என்று பேசினார். இந்துத்துவ சனாதன சக்திகளின் மீது நாம் கவனமாக இருக்க வேண்டும் என அப்போதே விழிப்புணர்த்தி பேசி யவர் .

ஜாலியன் வாலாபாக் படுகொலை களை பிரிட்டீஸாரின் அடக்குமுறை களை கண்டித்து தனது வழக்கறிஞர் தொழிலை விட்டு விலகி , முழு நேர போராட்டக்காரராக தன்னை முன் நிறுத்திக் கொண்டவர்.

சென்னை மாநகராட்சி ஏழுகிணறு பகுதி உறுப்பினராக இருந்தபோது பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்க வேண்டும் என்பதை வலியு றுத்தி பேசியிருக்கிறார். ஐஸ் ஹவுஸ் பகுதியை அடுத்திருந்த மிகப்பரந்து விரிந்த அவரது குடியிருப்பின் ஒரு பகுதியில் சுவாமி விவேகானந்தரை தங்க வைத்து ,தமிழகத்தில் அவர் இருப்பை பெருமைப்படுத்தியவர் சிங்காரவேலரே!

இவ்வாறு பலரும் சிங்காரவேலின் சிறப்புரைத்து பேசி சிறப்பித்தனர்.

சிங்காரவேலரின் எழுத்தாக்கங்களை செயல்பாடுகளை எல்லாம் அவ்வப் போது தொடர்ந்து புலனத்தில் பதிவி ட்டு பரப்புரைத்து வரும் வழக்கறிஞர் லிங்கனின் நற்சேவைகளை பாராட்டி இஸ்கப் சார்பில் பயனாடை அணிவி த்து , புத்தர்சிலை பரிசளித்து சிறப்பித் தனர்.

வழக்கறிஞர் லிங்கன் பாராட்டு பரிச ளிப்புக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை வழங்கி, சிங்காரவேலரின் “சிந்த னைக் களஞ்சியம்” உள்ளிட்ட நூல்கள் அனைத்தும் இளம் தலை முறையின ருக்கு வாசிக்க கிடைத்திட மறு பதிப்பு செய்யப்பட வேண்டும் என கோரி க்கை வைத்து பேசினார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை க்கு “சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சாலை” என பெயரிட வேண்டும்; சென்னையின் பிரதான இடத்தில் அரசு சார்பில் சிங்காரவேலருக்கு சிலையும் மணி மண்டபம் நிறுவிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமுடிவில் மாவட்ட தலைவர் தமிழ் மது நன்றி தெரிவித்து பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here