தேசிய மருத்துவர்கள் தினம் – ஜூலை 1

0
314

இன்று நமக்கு சாதாரணமாக கிடைக்கும் வசதிகளும் வாய்ப்புகளும் சாதாரணமாக இருந்தாலும், அவை அனைத்தும் சாதாரணமாக வந்தவை அல்ல.
கடவுளுக்கு அடுத்தப்படியாக கருதும் நபர் ஒன்று உண்டு என்றால் அவர் மருத்துவர் என்று சட்டென்று கூறிவிடுவோம். இன்று எட்டும் தூரத்தில் நமக்கு கிடைக்கும் இந்த உயிர்காக்கும் மருத்துவச் சேவை வந்த பாதை அவ்வளவு சுகமானதாக இருக்கவில்லை.
1800 ஆம் ஆண்டுகளின் முன் பகுதியில் இந்தியாவில் மருத்துவச் சேவை என்பது ஒரு சாரார் மட்டுமே வழங்கிவந்தனர். ஆனால், இந்தச் சேவையை சமூக அந்தஸ்து கருதி, அந்தச் சேவையை மறுத்து உயிரை மாய்த்துக்கொண்ட வரலாறும் இருக்கத்தான் செய்கிறது. பொது மருத்துவம் என்பதும் அறுவை சிகிச்சை மருத்துவம் என்பதும் 1800 ஆண்டுகளுக்கு பின்பகுதி வரை அறியப்படாத விஷயமாகவே இருந்தது.
ஆங்கிலேய வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சை செய்வதற்காக 1665ஆம் ஆண்டு சென்னையில் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைதான் இந்தியாவின் முதல் மருத்துவமனை என்று வர்ணிக்கப்படுகிறது. செயின்ட். ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனை ஆங்கிலேயரின் நலன் கருதி மட்டுமே இயங்கியதே தவிர்த்து பொதுமக்களின் வசதிக்காக அல்ல. இம்மருத்துவமனையில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க 1835ல் ஒரு மருத்துவப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. முதன்முதலாக இந்தக் கல்லூரியில் இந்தியர்கள் 1842 முதல்தான் அனுமதிக்கப்பட்டனர். 1850ல் கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது. அக்டோபர் 1, 1950 முதல் இந்தக் கல்லூரி மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. 1852இல் முதல் மாணவர்கள் பட்டம் பெற்றனர். 1857இல் மெட்ராஸ் பல்கலைக்கழக அங்கிகாரம் பெற்றது. உலகின் முதல் நான்கு பெண் மருத்துவர்களில் ஒருவரான மேரி சார்லலெப் 1878ஆம் ஆண்டு இந்தக் கல்லூரியில்தான் பட்டம் பெற்றார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியும் இங்கு பயின்றவரே.
மருத்துவ வரலாற்றை புரட்டிப் பார்க்கையில் 1900 களின் தொடக்கத்தில் மருத்துவக் கல்வியும், மருத்துவத்துறையும் தனியார் வணிகங்களிடமே இருநத்து. 1950 களின் பின்பு இந்த நிலை கனடாவிலும் ஐரோப்பாவின் பல நாடுகளில் மாறத்தொடங்கியது. தனியாரிடம் இருந்த மருத்துவத்துறை பொதுமக்களின் மருத்துவத் தேவையை பூர்த்திசெய்யவில்லை. லாபம் ஈட்டும் நோக்கில் நோய்களை வரும் முன் காப்பதை விட, வந்த பின் குணப்படுத்தும் பண்பைப் பெற்றிருந்தது. இதனால் பெரும்பான்மை மக்கள் அரசு மருத்துவ சேவைகளை வழங்க உதவவேண்டும் என்று வேண்டினர். இதன் காரணமாக 1960 களில் கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் மருத்துவக் கல்வியையும் சேவையும் அரசு முதன்மையாக வழங்க தொடங்கியது. அரசு கட்டுப்பாட்டுக்குள் மருத்துவம் வந்த பின்னர், மருத்துவர்கள் அரச சேவையார்களாக மாறினர்.
உண்மையைச் சொல்லவேண்டுமேன்றால், இந்த நூற்றாண்டில் பிறந்த நாம் அனைவருமே அதிபாக்கியசாலிகள்தான். அத்தனை வகை நவீன மருத்துவச் சேவைகளையும் நாம் அனுபவித்து வருகிறோம். பெயர் தெரியாத நோயால் கொத்தாய் கொத்தாய் இறந்த சம்பவங்கள் அனைத்தும் செய்தியாய் மட்டுமே படித்திருக்கிறோமே தவிர அதை நாம் அனுபவித்ததில்லை. 1900 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மருத்துவத் துறையின் வளர்ச்சி உலக அளவில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்தது.
அறுவை சிகிச்சையில் மருத்துவ உலகம் கடந்து வந்த பாதை:
• 1902ஆம் வருடம் முதன் முதலாக ‘அலெக்ஸில்’ கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.
• 1918ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் முதல் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
• 1954ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ‘பாஸ்டன்’ நகரில் டாக்டர். ஜான் முர்ரே என்பவர்தான் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
• 1965ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
• 1967ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி, தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
• 1983ஆம் ஆண்டில்தான் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில்தான் முதன் முதலாக, நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
2005ஆம் ஆண்டுதான் முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புகளை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மருத்துவம் என்பது வணிகம் அல்ல, அது ஒரு சேவை என்பதை முதன் முதலில் தேசிய அளவில் உணரச் செய்தவர் டாக்டர். பிதான் சந்திரா ராய். மகாத்மா காந்தியின் மருத்தவராக இருந்த ராய், பின்னாளில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகவும் இருந்தார். ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை சிறப்பாக கிடைக்க வேண்டுமென்று தான் குடியிருந்த விட்டையே மருத்துவமனையாக மாற்றினார். அந்த மருத்துவமனையில் ஏழைகளுக்கு தினமும் தன் கையால் சிகிச்சையும் அளித்தார். மருத்துவச் சேவையில் அவர் செய்த தியாகத்தை மெச்சும் வகையில் அவர் பிறந்த தினமான ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.
‘மக்களின் நலவாழ்வு என்பது தேசிய உரிமை’ – பிதான் சந்திரா ராய்.
ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here