பேரிடர் காலங்களில் பணியாற்றுவது குறித்து தன்னார்வத் தொண்டர்களுக்கு தீயணைப்புத்துறை அதிகாரிகள் பயிற்சி;

0
305

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வடக்கு மண்டலத்தில் உள்ள நான்கு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 தன்னார்வத் தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

தங்க சாலையில் உள்ள பழைய மாநில பயிற்சி பள்ளியில் வடக்கு மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் பயிற்சியை தொடங்கி வைத்தார் தன்னார்வத் தொண்டர்கள் பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை தீயணைப்புத்துறை இணைந்து பணியாற்றுவது குறித்தும் முதலுதவி பயிற்சி, கயிறு முடிச்சுகள் போடும் பயிற்சி, பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது குறித்த பயிற்சி பாம்புகளை எப்படி கையாள்வது பற்றிய பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன

மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உதவி செய்து பாதுகாக்கப்பட்ட இடங்களில் மக்களை எவ்வாறு மீட்டு தங்க வைப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன

வடக்கு மண்டலத்தில் மட்டும் 175 தன்னார்வத் தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள் இதில் முதற்கட்டமாக 50 பேரை தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கப் பட்டதாக இயக்குனர் தெரிவித்தார் அடுத்தடுத்து இதுபோன்ற பயிற்சிகள் தன்னார்வத் தொண்டர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என்றும் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்படும் வெள்ள அபாயங்களில் தன்னார்வத் தொண்டர்கள் தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்களோடு இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here