
சென்னை அடையாறு பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூகப் பணித்துறையின் சார்பில் நாட்டில் இன்றைய சூழலில் சமூக நீதியை உறுதிப்படுத்துதல் எனும் தலைப்பில் மூன்று நாள் தேசிய கருத்தரங்கம் 16 பிப்ரவரி 2023 தொடங்கி 18 பிப்ரவரி 2023 வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீதி அரசர் திரு கே சந்துரு அவர்கள் கலந்து கொண்டு கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார் சமூக நீதி குறித்த பல்வேறு தகவல்களை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் முன்னெடுத்து வைத்தார். முதல் நாளில் மக்கள் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த திரு ஹென்றி தீபன் அவர்கள், சுதந்திரம் மற்றும் சமூக நீதி எனும் தலைப்பிலும், பேராசிரியர் தீபக் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நீதி எனும் தலைப்பிலும், டாக்டர் அவதி ராமையா அவர்கள் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி, என்னும் தலைப்பிலும், டாக்டர் எழிலன் நாகநாதன் அவர்கள் கல்வி நலவாழ்வு மற்றும் சமூக நீதி எனும் தலைப்பிலும், உரையாற்றினார்கள். இரண்டாம் நாளில் மதம் சாதி சமூகம் மற்றும் சமூக நீதி எனும் தலைப்பில் டாக்டர் ஜவஹருல்லா, தோழர் வாசுகி, டாக்டர் செம்மலர் போன்றோர் உரையாற்றினார்கள் இந்த நிகழ்வுக்கு நெறியாளராக திரு டேவிட் சுந்தர் சிங் அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்கள். அடுத்தபடியாக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் சமூக நீதி எனும் தலைப்பில் மே 17 இயக்கத்தினுடைய நிறுவனர் திருமுருகன் காந்தி அவர்கள், இந்திய பொருளாதாரம் மற்றும் சமூக நீதி எனும் தலைப்பில் டாக்டர் சி லக்ஷ்மணன் அவர்களும், சமூகநீதி பிரச்சனைகள் எனும் தலைப்பில் டாக்டர் ராஜசேகர் அவர்களும், பாலினம் மற்றும் சமூக நீதி எனும் தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களும் உரையாற்றினார்கள். இறுதி நாள் கருத்தரங்கத்தின் நிறைவு விழாவில் நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஏ ராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் மற்றும் செயலாளர் அருட் சகோதரர் டாக்டர் ஸ்டானிஸ்லாஸ் அவர்களும் , கல்வி இயக்குனர் டாக்டர் பாத்திமா வசந்த் அவர்களும், கல்லூரியின் முதல்வர் டாக்டர் உஷா ஜார்ஜ் அவர்களும் , துணை முதல்வர்கள் டாக்டர் கீதா ரூபஸ், டாக்டர் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் சமூக ஆர்வலர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இந்த நிகழ்ச்சியை சமூகப் பணி துறையின் துறை தலைவர் திருமதி ஜெ. திவ்யா அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
















