


அருள் மிகு ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நாச்சந்தி நாயகி ஆலயம் . வடக்கு மாட வீதி காலடிப்பேட்டையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் 39 ஆம் ஆண்டு மசான கொள்ளை திருவிழா 27.2.2025 வியாழக்கிழமை அன்று காலை 8 மணிக்கு பால் குடத்துடன் தொடங்கியது அருள்மிகு சாத்தாங்காடு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு108 பால்குடத்துடன் பக்தர்கள் வீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை 7 மணிக்கு மசான கொள்ளை திருவிழா ஏராளமான ஊர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல குழு தலைவர் தி. மு.தனியரசு. பகுதி துணை எம்.வி.குமார் Ex Mc ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த திருவிழாவை V.வேலு.Ex Mc. நம்ம விநாயகம் மற்றும் மகேந்திரன் EB சிறப்பாக நடத்தினார்கள். அன்று காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.













