சென்னை தண்டையார்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு ஆபத்தான நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,
சென்னை தண்டையார்பேட்டை வீரா குட்டி தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கேசவன், ஆடித்திருவிழா நிகழ்ச்சிக்காக கோவில் வாசலில் நின்றிருந்த போது திடீர் என்று வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு இதில் நிலைகுலைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த கேசவனை அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கேசவன் உயிரிழந்தார் இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த ரவுடி மதன் என்பவர் முன் விரோதத்தால் வெட்டியதாக உறவினர்கள் தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர், இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உறவினரிடம் விசாரித்ததில் 10 பேர் கொண்ட கும்பல் கேசவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
மேலும் இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கொண்ட கும்பலை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்,














