சென்னை வியாசர்பாடியில் ரூ5 க்கு மருத்துவர் பார்த்த புகழ்பெற்ற மக்களின் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் (வயது 70) காலமானார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிப்பை 1973-ம் ஆண்டு நிறைவு செய்தார் திருவேங்கடம் வீரராகவன். அவர் தொடக்க காலத்தில் ரூ2 க்குதான் மருத்துவம் பார்த்தார்.
சென்னை எருக்கஞ்சேரியிலும் வியாசர்பாடியிலும் 40 ஆண்டுகளாக ஏழைகளுக்காக மருத்துவர் பார்த்து வந்தவர் டாக்டர் திருவேங்கடம் வீரரராகவன். தமது நோயாளிகளிடம் ரூ5 மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வந்தார்.
இதனால் அப்பகுதி மக்களின் பெரும் மதிப்புக்குரிய மக்கள் மருத்துவராக திருவேங்கடம் வீரராகவன் திகழ்ந்தார். 2017-ல் அரசும் அவருக்கு விருது வழங்கி சிறப்பித்தது. தாம் அரசின் பணத்தில் படித்து மருத்துவரானவன்; ஆகையால் மக்களுக்காக குறைந்தபட்ச தொகையில் மருத்துவம் பார்க்கிறேன்; எதிர்ப்புகளைப் பற்றி கவலை இல்லை என உறுதியாக இருந்தவர் திருவேங்கடம் வீரராகவன்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது. டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் மறைவால் எருக்கஞ்சேரி, வியாசர்பாடி பகுதி மக்கள் பெருந்துயரத்தில் மூழ்கி உள்ளனர்.