வடசென்னை, எண்ணூரில் உள்ள, அசோக் லேலண்ட், பவுண்டரி டிவிஷன், எண்ணூர் யூனிட் தொழிற்சாலையில், 840 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில், ஊதிய உயர்வு ஒப்பந்தம், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைவேற்றப்படும். பேச்சுவார்த்தை அடிப்படையில், ஒப்பந்தம் முடிவு செய்ய கூடுதலாக ஓராண்டு காலம் வழக்கத்தில் இருந்து வருகிறது.
கடைசியாக, 10.9.2015 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம், 31.8.2018 ஆம் ஆண்டுடன் முடிந்தது. அதன்பின், மூன்று ஆண்டு காலமாகியும், நிர்வாகம் ஊதிய ஒப்பந்தம் போடாததால், ஊழியர்கள் போதிய வருமானமின்றி, தவியாய் தவிக்கின்றனர்.
அதே சமயம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, கல்வி கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள், பன்மடங்கு உயர்ந்திருப்பதால், சமாளிக்க முடியாத நிலையில், ஊழியர்கள் உள்ளனர்.
இது குறித்து, தொழிற்சாலை நிர்வாகம் எந்தவொரு ஆக்கபூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனை கண்டித்து, தொழிலாளர்கள் அனைவரும், 13.8.2021 பணி புறக்கணிப்பு போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் முன்னிலையில், ஆகஸ்ட், 23, 24 ஆகிய தேதிகளிலும், 26, 27 ஆகிய தேதிகளில், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையருடனும் பேச்சுவார்த்தை நடந்தது.
தொழிற்சாலை நிர்வாகம் எந்தவித உடன்பாட்டிற்கும் வராததால், பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது. மேலும், ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றும் முன், 250 பேரை கட்டாய விருப்ப ஓய்வில் செல்லவும் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, இப்பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி, இன்று (30 ம் தேதி) மாலை, 3:00 மணியளவில், கத்திவாக்கம் நகராட்சி அலுவலகம் எதிரே, அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கம் பவுண்டரி டிவிசன் சார்பில், சங்க தலைவர் எம்.ராஜகாந்தம் தலைமையிலும், சங்க வழக்கறிஞர் திருமூர்த்தி முன்னிலையிலும், வடசென்னையின் அனைத்து தொழிற்சங்களும் பங்கேற்ற, ஆர்பாட்டம் நடந்தது.
இதில், தொழிலாளர்கள், ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பேட்டி தொழிற்சங்க செயலாளர் தனுஷ்கோடி













