சென்னையில் படித்த இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை 65 ரூபாய் மாத்திரை 1500 ரூபாய் வரை விற்பனை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்
வட சென்னை பகுதிகளில் நாளுக்கு நாள் இளைஞர்கள் சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர சோதனை ஈடுபட்டனர்
இதனடிப்படையில் கொருக்குப்பேட்டை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்ததில் வடசென்னை பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் வகையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்வது தெரியவந்தது
மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் வழங்கும் NITRAVET 10 ,TYDALL ஆகிய மாத்திரைகளை ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து ஸ்ரீகாந்த் என்ற கோபாலகிருஷ்ணன் என்பவர் மூலமாக மாத்திரைகளை வாங்கி வந்து அவற்றை பொடியாக்கி நீரில் கரைத்து அதனை வடிகட்டி சிரஞ்சி மூலம் நரம்புகளில் ஏற்றி போதைக்கு பயன்படுத்துவதாக தெரிய வந்தது
மேலும் போதை மாத்திரைகளை உடலில் ஏற்றி பின்னர் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபடுபடும் போது சிக்கிக் கொண்டால் அவர்களிடம் அடி வாங்கினாலும் உடல் வலி ஏற்படாத அளவிற்கு இந்த போதை மாத்திரை செயல்படுவதால் இதனை பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது
இதனை அடுத்து கொருக்குப்பேட்டையை சேர்ந்த நரேந்திரன் ,சதீஷ்குமார், ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேரை கொருக்குப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சி ,கத்தி, செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் சென்னையில் மருத்துவர் சீட்டு இல்லாமல் இந்த மாத்திரைகள் வழங்கக்கூடாது என காவல்துறையினர் மருந்து கடைகளுக்கு எச்சரித்துள்ள நிலையில் மருந்துக்கடைகளில் யாரும் விற்பனை செய்யப்படாததால் ஆந்திர மாநிலத்தில் 65 ரூபாய்க்கு ஒரு மாத்திரை வாங்கிவந்து 1500 ரூபாய் வரை விற்பனை செய்தது தெரிய வந்தது
கஞ்சா புகையிலை குட்கா என போதை ஏற்றும் பொருட்கள் தடை செய்யப்பட்டு வரும் நிலையில் புது புது விதமாக இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் போதை கும்பலின் செயல் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது














