மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் மண் சரிந்து குழிக்குள் சிக்கிக்கொண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு;

0
189

சென்னை எண்ணூரில் மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டிய போது பள்ளத்தில் சிக்கி கொண்ட இரண்டு வட மாநில நபர்களை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு மற்றொரு நபருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எண்ணூர் தாழங்கப்பம் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணியில் வட மாநிலத்திவர்கள் தொழிலாளர் பணிக்காக ஈடுபடுத்திருந்த போது எதிர்பாராத விதமாக நேற்றைய மதியம் மண் சரிந்து இருவர் குழிக்குள் சிக்கிக்கொண்டனர் உடனடியாக அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து ஜேசிபி இயந்திரம் மற்றும் மீனவர்களின் உதவியோடு இருவரையும் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அம்ரிஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் குழிக்குள் சிக்கிக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்ரிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

பிரகாஷ் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here