சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில், போதைக்காக,வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த, 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில், தடைசெய்யப்பட்ட வலி நிவராணி மாத்திரைகளை , போதைக்காக, ஒரு கும்பல் விற்பனை செய்வதாக, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன் பேரில்,, போலீசார், தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு, ராணிப்பேட்டை, ஆற்காடு, மீசாப்பேட்டை , அண்ணா நகர் ,இரண்டாம் தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ஜெகன் நாதன் (எ) ஜெகன்(21)கொருக்குப்பேட்டை, ஒண்டி வீரன் கோயில் தெரு மகேஷ் மகன் சதீஷ் சாய்(25), துரை பாபு மகன் கநேஷ்(எ)பாபு(21), ரங்க நாதபுரம் மாசிலாமணி மகன் அய்யப்பன்(19), மண்ணப்பன் தெரு சந்திரன் மகன் கவுதம்(20), வண்ணாரப்பேட்டை, நைனியப்பன் தெரு மணி முருகன் மகன் பாலாஜி(25), வேலூர், ஆற்காடு கணபதி மகன் பிரபு(27), நெல்லூர், ராஜெந்திரா நகர் மனோகர் மகன் ஆர்ஷா(31), நெல்லூர், ராமானுஜ மகன் விஜய்(26) ஆகிய 9 பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து, தடைசெய்யப்பட்ட நைட்ரோ விட் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகள் 600 கேப்சூல்கள் பறிமுதல் செய்யபட்டன.











