மாநகராட்சி மருத்துவமனைக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை தனியார் தொழிற்சாலை நிறுவனம் வழங்கியது:

0
216

 

 

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு தனியார் தொழிற்சாலையான எம்ஆர்எப் நிறுவனத்தில் இருந்து சிஎஸ்ஆர் நிதியின் மூலமாக மருத்துவமனைக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கியது

இதில் அல்ட்ரா சவுண்ட் சிடிஜி இசிஜி அறுவை சிகிச்சை அரங்கை சுத்தப்படுத்தும் போக்கர் மிஷின் மூன்று ட்ராலி ஸ்டீல் ரேக் மற்றும் 50 நாற்காலிகள் வழங்கப்பட்டன இதற்கான நிகழ்ச்சி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது எம்ஆர்எப் பொது மேலாளர் ஜேக்கப் சாக்கோ அனைவரையும் வரவேற்று பேசினார் சட்டமன்ற உறுப்பினர் கே பி. சங்கர் தலைமை தாங்கினார் மண்டல குழு தலைவர் திமு தனியரசு முன்னிலை வகித்தார் மருத்துவ உபகரணங்களை கே பி சங்கர் மருத்துவ அதிகாரி மாலதியிடம் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அதிகாரி நந்தகுமார் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வி ராமநாதன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கலைவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here