

*கற்றல் இனிது கல்வி அறக்கட்டளை* நடத்திய மாநில அளவிலான மாணவர்களின் திறனறி போட்டி 2023 மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா இராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு விருந்தினர்களாக டாக்டர் தமிழ் மணி, திரு. பிரான்சிஸ் சேவியர், டாக்டர் ரஜினி, திருமதி ப்ரியசகி மற்றும் திருமதி லக்ஷ்மி ராஜாராம் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
*கற்றல் இனிது கல்வி அறக்கட்டளை* சார்பில் 6 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதும், 10 ஆசிரியர்களுக்கு சிறந்த கற்பித்தல் விருதும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்கள்.
போட்டியில் கலந்து கொண்ட சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பையும், பாராட்டு சான்றிதழும் அளித்து கௌரவித்தனர்.
விழா ஏற்பாடு திருமதி. ஆர். அகிலாண்டீஸ்வரி, அறங்காவலர்.
திரு. வீ. பாலாஜி.
செயலாளர்.
















