
அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி :
மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
மீனவ மகளிர், மீனவ தாய்மார்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்தும், மீன் வாடை அடிக்கும் என்று தொழிலை அசிங்கமாகவும், மீனவ தாய்மார்களை அலைகழிப்பு செய்து மன உளைச்சல் ஏற்படுத்திய நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?*
நேற்று 06.02.2023 மதியம் சுமார் 3.30 மணியளவில் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த தடம் எண் 442B அரசு பேருந்து TN.68 N 0520 என்ற எண் கொண்ட அரசு பேருந்து நாகப்பட்டினத்திற்கு முன்பு இருக்கக்கூடிய வாஞ்சூர் சோதனை சாவடி பேருந்து நிறுத்தத்திற்க்கு முன்பு சுமார் மாலை 4.10 மணியளவில் காலியான மீன் கூடையுடன் (அன்ன குண்டன்) நின்ற சுமார் 5 மீனவ தாய்மார்களை பார்த்தவுடன் பஸ் நிறுத்தத்திற்க்கு முன்பாக சுமார் 20 மீட்டருக்கு முன்பாக பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுவிட்டு மீனவ தாய்மார்கள் மூச்சு இறைக்க ஓடி வருவதை பார்த்த ஓட்டுனர் பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்தை எடுத்து சென்றுவிட்டார்.
மீனவ தாய்மார்கள் ஓடிவந்து பேருந்தை தட்டிய போதும் பேருந்தை நிறுத்தி மீனவ தாய்மார்களை அரசு பேருந்தில் ஏற்றாமல் சென்றது மட்டுமல்லாது இதுங்களை ஏற்றினால் மீன்வாடை அடிக்கும் என்று மீனவ தாய்மார்களை கொச்சையாக பேசினார் ஓட்டுனர்.
அந்த அரசு பேருந்தில் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவராகிய டாக்டர் நாஞ்சில் P.ரவி யாகிய நானும், என்னுடன் வடசென்னை மாவட்ட செயலாளராகிய S.முருகன் அவர்களும் ஓட்டுனரிடம் மீனவ தாய்மார்கள் காலி கூடையுடன் தான் நிற்கின்றார்கள். அவர்களை ஏன் ஏற்றாமல் பேருந்தை இயக்குகின்றீர்கள் என்று கேட்ட போது யோ போய் ஓரமாய் உக்காரு மீன் வாடை அடிக்கும் உனக்கு என்ன தெரியும் என்று ஒருமையில் பேசினார் நடத்துனர். பெரிய இவனுங்க என தடித்த கனமான வார்தைகளில் பேசினார்.
ஒட்டுனர் மற்றும் நடத்துனர் இருவர் பெயரையும் கேட்ட போது நீ என்ன மந்திரியா? நீ என்ன கலெக்ட்டரா ? மீன்காரிகளுக்கு இந்த பஸ்சில் இடம் கிடையாது. நீ முடிந்ததை பாரு என்று கூறினார்கள்.
இது குறித்து நாகப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் பொது மேலாளர் அவர்களுக்கு புகார் எழுதுவது தெரிந்த உடன் தெரியாமல் பேசிவிட்டோம் தெரியாமல் மீனவ தாய்மார்களை ஏற்றாமல் வந்துவிட்டோம் எங்களை இந்த ஒருமுறை மன்னித்து விட்டுவிடுங்கள்.
இனியும் இது போன்று செய்யமாட்டோம் என்று நடித்தார்கள்.*
அரசுக்கு வருவாய் இழப்பு, அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்குதல், தனி மனித தாக்குதல், ஜாதி பெயரை தவறாக பயன்படுத்தி மீனவ தாய்மார்களை அலைகழிப்பு செய்தல், மீனவ தாய்மார்களை இழிவுபடுத்துதல், மீன சமூகத்தை கொச்சையாக பேசுதல், மீனவ தலைவர்களை தடித்த கடினமான வார்தைகளால் கொடுஞ் சொல் பேசிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது நாகப்பட்டினம் நிலைய பொது மேலாளர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது,
இது சம்மந்தமாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் எல்லா நிறுத்தங்களிலும் நின்று பயணிகளையும், மீனவ தாய்மார்களையும், மாற்று திறனாளிகளையும் கனிவுடன் ஏற்றி செல்ல அறிவுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு நாகப்பட்டினம் நிலைய பொது மேலாளருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாங்கள் பயணம் செய்ததற்கான பேருந்து டிக்கெட்டும் இணைத்து புகார் தெரிவித்துள்ளேன்.
ஆகவே மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாகை மாவட்டத்தில் மீனவர்கள் அதிகமாக இருக்க கூடிய இந்த பகுதியை சார்ந்த தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவரும், நாகை தெற்கு மாவட்ட செயலாளருமான. N.கெளதம் அவர்கள் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் .
மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மீனவர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவண்;
*டாக்டர் நாஞ்சில் P.ரவி.தலைவர்*
*அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA)*
















